- 20/4/2016 திங்கள் கிழமை அன்று, பள்ளியின் 39 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக பள்ளி மாணவர்களின் ஒலிம்பிக் தீபத்தை பள்ளி செயலாளர் ஜனாப் A.R. முகமது பாட்ஷா அவர்கள் ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றினார்கள். அதனை தொடர்ந்து இணைச் செயலாளர் ஜனாப் K.P.முகமது பாரூக் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.
- விழாவானது கிராத் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பம் செய்யப்பட்டது. முதல்வர் திருமதி B. கோமதி அறிவழகன் M.Sc., M.Ed., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். பள்ளியின் தாளாளர் ஹாஜி P.H. அப்துல் முகமது M.A., அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்கள். நிர்வாக அலுவலர் திருமதி K. பத்மாவதி சிங்காரவேலன் M.A.,M.Phil.,B.Lit., தலைமை உரையாற்றினார்கள், பின்னர் பள்ளியின் தலைவர் ஹாஜி K.P.A. ஜாஃபர் அலி B.E.,M.Sc.,(Eng) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
- இதனைத் தொடர்ந்து கடந்த கல்வியாண்டின் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பிடித்த பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- விழாவின் ஒரு பகுதியாக சிலம்பம், கராத்தே, யோகா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டு விழாவிற்கான பாராட்டு சான்றிதழ்கள், வருகைக்கான சான்றிதழ்கள், இக்கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மழலையர்களின் Rhymes, Story, மற்றும் Quiz நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
- இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆங்கில ஆசிரியர் திரு A. அருள் கென்னடி M.A.,B.Ed., அவர்கள் நன்றி உரையுடன் ஆண்டு விழா இனிதே நிறைவு பெற்றது.
