- எமது கிரஸெண்ட் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 2026 ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 80 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- பள்ளியின் தலைவர், தாளாளர், செயலாளர்,இணை செயலாளர், பள்ளி நிர்வாக உறுப்பினர் முன்னிலை வகிக்க இறைவணக்கத்துடனும் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் விழா தொடங்கப்பட்டது.
- எமது பள்ளியின் முதல்வர் திருமதி B. கோமதி அறிவழகன் M.Sc.,M.Ed., அவர்கள் வரவேற்புரை வழங்க எமது பள்ளியின் தலைவர் ஹாஜி K.P.A. ஜாஃபர் அலி B.E.,M.Sc.,(Eng), AIMADAM., அவர்கள் தேசிய கொடியேற்றி மாணவ மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று, வாழ்த்துரை வழங்கினார். மேலும், முதல்வர் திருமதி கோமதி அறிவழகன் M.Sc.,M.Ed.,அவர்கள் சிறப்புரையாற்றினார்.
- சுதந்திர தினம் பற்றி திருமதி S.நஸ்ரின் பீவி M. Sc., B. Ed.,அவர்களும் மாணவி S.சமிகா அப்ரா (XI - A1) ஆகியோரும் உரையாற்றினர். SAREE DRILL Exercise, அதனைத் தொடர்ந்து 10 ம் மற்றும் 12 ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி விகிதம் காட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டியில் மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- ஆங்கில முதுகலை ஆசிரியர் திரு A.அருள் கென்னடி M.A.,B.Ed., அவர்கள் நன்றியுரை கூறி தேசிய கீதம் பாடப்பட்டு விழா இனிதே நடந்தேறியது.
