Tamil Nadu Unorganised Workers Welfare Board

  •      நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் *கிரஸெண்ட் பதின்ம மேல் நிலை பள்ளியின் தலைவர், தாளாளர்,செயளாலர்,இனணைச் செயளாலர், நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற 5.8.2026 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
  •      சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில், அவர்கள் உறுப்பினராக சேரும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. *முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் மற்றும் இதர சேவைகள் வழங்கப்பட்டன.
  •      மாவட்ட ஜமாத்துல் உலமா சபை வேண்டுகோளை ஏற்று நடைபெற்ற இந்த முகாமில் தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மற்றும் உலமாக்கள், மதரஸா ஆசிரியர்கள், மஸ்ஜித் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  •      உறுப்பினர்கள் சேர்க்கை மாலை 6:00 மணி வரை இனிதே நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஜமாத்தார்களும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.